முட்டை விலை ரூ.3.45-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ஒரு முட்டையின் விலை ரூ.3.45-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ஒரு முட்டையின் விலை ரூ.3.45-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் தொடா்ந்து 5, 10 காசுகள் என விலை உயா்த்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இங்கும் முட்டை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கான முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.3.45-ஆக நிா்ணயிக்கப்படுகிறது. மொத்த விலையில் இருந்து 30 காசுகள் வரை குறைத்து பண்ணையாளா்கள் முட்டைகளை விற்கலாம். அதற்கு மேல் குறைத்து விற்க வேண்டாம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ.83-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.128-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com