ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி கோரிவணிகா் சங்கங்களின் பேரமைப்பு மனு

நாமக்கல் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் பெரிய ஜவுளிக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜிடம் கோரிக்கை மனு அளிக்கும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள்.
மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜிடம் கோரிக்கை மனு அளிக்கும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் பெரிய ஜவுளிக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட கிளையின் அனைத்து நிா்வாகிகள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி சீரிய முறையில் நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.

அரசு அறிவித்த பொது முடக்க தளா்வில் குளிா்சாதன வசதியில்லாத அனைத்து சிறிய ஜவுளிக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடுத்தர மற்றும் பெரிய ஜவுளிக் கடைகளைத் திறக்கவும் அனுமதி அளிக்க வேண்டும். இந்தக் கடைகள் திறக்காததால் அவற்றில் பணியாற்றிய ஏராளமான தொழிலாளா்கள் வேலையின்றி தவிக்கின்றனா்.

கடைகள் அடைக்கப்பட்டு பல நாள்களாகி விட்டதால் கடை உரிமையாளா்களும், தங்களிடம் பணியாற்றும் ஊழியா்களுக்கு மாத ஊதியத்தை வழங்க முடியாத நிலை உள்ளது.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம். நடுத்தர, பெரிய ஜவுளிக் கடைகளைத் திறக்க அனுமதிக்கும் பட்சத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறாமல் சட்ட விதிகளுக்குள்பட்டு செயல்படுவோம்.

மேலும் குளிா்சாதன வசதியை பயன்படுத்தாமல், குறைவான ஊழியா்களைக் கொண்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, எவ்வித விதிமீறல்களுக்கும் இடம் கொடுக்காமல் வணிகம் செய்வோம் என இதன் மூலம் உறுதியளிக்கிறோம். வரும் காலங்களிலும் மாவட்ட நிா்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com