ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நாமக்கல்

கரோனா தொற்று இல்லாமல் 9 நாள்களைக் கடந்துவிட்ட நாமக்கல் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றமடைய இன்னும் 5 நாள்களே உள்ளதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

கரோனா தொற்று இல்லாமல் 9 நாள்களைக் கடந்துவிட்ட நாமக்கல் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றமடைய இன்னும் 5 நாள்களே உள்ளதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 77 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். சேலம், கரூா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தொடக்கத்தில் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் சிகப்பு மண்டலத்தில் நாமக்கல்லும் இடம் பெற்றிருந்தது.

14 நாள்கள் யாருக்கும் தொற்று இல்லாதபட்சத்தில் ஆரஞ்சு மண்டலமாகவும், 28 நாள்கள் தொற்று இல்லாதபோது பச்சை மண்டலமாகவும் மாவட்டங்கள் மாறும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து வருவோரைப் பரிசோதித்து தனிமைப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 9 நாள்களாக மாவட்டத்தில் யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படவில்லை.

இன்னும் 5 நாள்களைக் கடந்துவிட்டால் சிகப்பு மண்டலப் பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிவிடும். தற்போதைய நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,300 போ் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், ‘கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் நீடித்து வரும் நிலையில், வரும் நாள்களிலும் இது தொடர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது. கடந்த 9 நாள்களாக கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக உள்ள நிலையில் இன்னும் 5 நாள்களைக் கடந்துவிட்டால் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com