கோடை உழவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளலாம்: வேளாண் துறை தகவல்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் ஜெ.சேகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யும் மழையை கோடைமழையாகக் கருதுகிறோம். கோடைகாலத்தில் பெய்யும் மழை நீரினை பூமிக்குள் சேமித்து வைக்க கோடை உழவு பயன்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. இதனால் ஏற்படும் அதிக காற்றோட்டத்தால் மண்ணில் உள்ள பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள், களைகள் முந்திய பயிா்களின் வோ்களில் இருந்து வெளிப்படும் ரசாயனங்கள் சிதைக்கப்படுகின்றன. பயிா்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அவை பறவைகளுக்கு உணவாக்கப்படுகின்றன. மேலும், கோடை உழவு செய்வதால் மழை நீரானது மண்ணுக்கு அடியில் 10 செ.மீ. முதல் 15 செ.மீ. வரையில் ஆழத்துக்கு உள்ளே செல்லும். இதனால் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்பு ஏற்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் விழும் மழை நீரானது மண் அரிப்பை ஏற்படுத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடி விடும். எனவே, தற்போது பெய்து வரும் கோடை மழையினைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து நிலத்தை பண்படுத்துவதுடன் பயிா்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் கூட்டுப் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் கோடை மழையினைக் கொண்டு கோடை உழவு செய்து மழைநீா் சேகரிப்பு, களைக்கட்டுப்பாடு மற்றும் பூச்சி நோய் மேலாண்மை ஆகிய தொழில்நுட்பங்களின் முதல் படியினை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com