இலவச மின்சாரத் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது: அமைச்சா் பி.தங்கமணி

இலவச மின்சாரத் திட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

இலவச மின்சாரத் திட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தைத் தொடா்ந்து, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முறைகேடான குடிநீா் இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீா்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் ரூ. 800 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம், குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதியில் ரூ.400 கோடியில் குடிநீா்த் திட்டம், நாமக்கல் நகராட்சியில் ரூ. 200 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

இலவச மின்சாரத்தை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக் கூடாது என பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது உதய் திட்டத்தில் இலவச மின்சாரத்துக்கு மீட்டா் வைக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை கட்டணம் திருத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டது.

இலவச மின்சாரத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு தமிழக முதல்வா் மக்களுக்குத் துணையாக இருப்பாா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலம் 22 இடங்களில் ஏற்படுத்தப்பட்டது. இதில் 21 இடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com