தொழிற்சாலைகள் திறப்பால் 3,000 மெகாவாட் அதிகரிப்பு: அமைச்சர் பி.தங்கமணி

தமிழகத்தில் பொது முடக்கம் தளர்வால் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளின் திறக்கப்பட்டதால் 3,000 மெகாவாட் மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
தொழிற்சாலைகள் திறப்பால் 3,000 மெகாவாட் அதிகரிப்பு: அமைச்சர் பி.தங்கமணி

தமிழகத்தில் பொது முடக்கம் தளர்வால் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளின் திறக்கப்பட்டதால் 3,000 மெகாவாட் மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிய திட்டப்பணிகளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 2023-ஆம் ஆண்டுக்குள் மின் தேவையை அதிகரிக்கும் பொருட்டு, 6000 மெகாவாட் மின்சாரம், அனல் மற்றும் நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி  செய்யப்படவுள்ளது.  வடசென்னை அனல் மின் நிலையத்தில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கரோனா பரவலால் தற்போது அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கு மேல் மீண்டும் பணிகள் தொடங்கப்படும். வரும் டிசம்பரில் அது 2021 ஜனவரியில் மின் உற்பத்தி திட்டம் பயன்பாட்டுக்கு வரும். 

இதேபோல் மற்ற அனல் மின் நிலையங்களிலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொல்லிமலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நீர் மின் நிலையங்கள் அமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2023-2024-இல் இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 11 ஆயிரம் மெகாவாட்டை மட்டுமே தேவைக்காக மக்கள் பயன்படுத்துகின்றனர். கரோனா பொது முடக்கத் தளர்வால் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால் 3000 மெகாவாட் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் 3000 மெகாவாட் மின்சாரம் இருப்பில் உள்ளது.

நாமக்கல்  மக்களவை உறுப்பினர் சின்ராஜஜை பொருத்த வரை முழுக்க முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார். கரோனோ தொடங்கியது முதல் 60 நாட்கள் எங்கே இருந்தார்  என தெரியவில்லை. அவரது கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கூட ஏதோ அந்தந்த பகுதியில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். வெளியே வராததால் மக்கள் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்பதை மறைக்க அரசின் மீது அவதூறு பரப்பி வருகிறார். சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் குழாய் இணைப்பை வீட்டிற்கு எடுத்துள்ளதாக புகார் கூறியுள்ளார். அதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் நேரில் வந்து பாருங்கள், தவறு செய்தால் ஏற்றுக்கொள்கிறேன் என நேரில் சென்று சவால் விட்டார். 

சவால் விடும் அளவிற்கு  அவர் தைரியம் ஆனவர். அதை எதிர்கொள்ளமுடியாமல் சட்டப்பேரவை உறுப்பினர் அடிக்க வந்து விட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். இப்போது கரோனோ காலம் ஆய்வு செய்யக்கூடாது. அப்படியே ஆய்வு செய்தாலும் கூட தவறு இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் புகார் மனு அனுப்ப  வேண்டும். அதை நேரிடையாக சென்று கண்டிப்பதற்கோ, அதிகாரிகளை மிரட்டவதற்கு அதிகாரம் இல்லை. அவர் சட்டத்தை கையில் எடுப்பது எதிர் காலத்தில் தேவையில்லாத பிரச்னையை உண்டாக்கும். அதிகாரிகள் வேலை செய்வதை தடுக்கும் வகையில் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் செயல்பட்டு வருகிறார். 

எதிர்க்கட்சி தலைவர் அவருக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளார். எதிர்கட்சி தலைவர் நாமக்கல் மக்களவை உறுப்பினர் செயல்பாடு எப்படி என திமுகவினர் இடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அப்போது தான் உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com