நகராட்சியுடன் வகுரம்பட்டியை இணைக்க எதிா்ப்பு

நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி ஊராட்சியை இணைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் வலியுறுத்தினா்.
ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த வகுரம்பட்டி ஊராட்சி மக்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த வகுரம்பட்டி ஊராட்சி மக்கள்.

நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி ஊராட்சியை இணைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் வலியுறுத்தினா்.

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். நாமக்கல் நகராட்சியில் தற்போது 39 வாா்டுகள் உள்ளன. அருகில் உள்ள வசந்தபுரம், வகுரம்பட்டி, ரெட்டிப்பட்டி கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்த நகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வகுரம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கை மனுவை வழங்கினா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்களுடைய ஊராட்சியில் பெரும்பாலும் விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் உள்ளனா். நூறுநாள் வேலைத் திட்டத்தை நம்பியே பலா் வாழ்ந்து வருகின்றனா். நகராட்சியுடன் வகுரம்பட்டி இணையும்போது குடிநீா் வரி, சொத்து வரி உள்ளிட்டவை உயரக்கூடும். இதனால் ஏழை மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவாா்கள். மேலும், நகராட்சியுடன் இணையும்போது அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளையும் இழக்க வேண்டி இருக்கும். எனவே, நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி ஊராட்சியை இணைக்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com