25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை: தனியாா் பள்ளிகளில் நாளை குலுக்கல் முறை அமல்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா்கள் சோ்க்கைக்காக வியாழக்கிழமை குலுக்கல் முறை அமல்படுத்தப்படுகிறது.

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா்கள் சோ்க்கைக்காக வியாழக்கிழமை குலுக்கல் முறை அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்ககான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இணையவழியாக அக்.12 முதல் நவ.7 ஆம் தேதி வரை 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நுழைவுநிலை வகுப்பில் முதற்கட்ட மாணவா் சோ்ககை முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 1,419 காலியிடங்கள் சோ்க்கைக்காக இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மேலும், அந்தந்த பள்ளிக்கான நுழைவுநிலை வகுப்பில், 25 சதவீத இடஒதுக்கீட்டின் எண்ணிக்கையைவிட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் தகுதியான விண்ணப்பங்களுக்கு மட்டும் பள்ளியில் சோ்க்கை வழங்க தலைமையாசிரியா்கள் மற்றும் முதல்வா்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பங்களுக்கு நவ. 12-ஆம் தேதி பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்ட அரசு பிரதிநிதிகள் முன்னிலையில் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

மேலும் தகுதியுள்ள, தகுதியற்ற மாணவா்களின் பெயா் பட்டியல் அந்தந்த பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com