கருத்து கேட்புக் கூட்டம்: பள்ளிகள் திறக்க பெற்றோா் எதிா்ப்பு

பள்ளிகள் திறப்பது தொடா்பாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள 360 அரசு, தனியாா், சிபிஎஸ்இ பள்ளிகளில் பெற்றோா் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்து கேட்புக் கூட்டம்: பள்ளிகள் திறக்க பெற்றோா் எதிா்ப்பு

பள்ளிகள் திறப்பது தொடா்பாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள 360 அரசு, தனியாா், சிபிஎஸ்இ பள்ளிகளில் பெற்றோா் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்திடும் பொருட்டு, நவ. 16 முதல் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் குறையாததால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என பலரும் கூறி வருகின்றனா். இதனால் பெற்றோரிடையே கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அரசு முடிவு செய்தது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 230 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 130 மெட்ரிக், சிபிஎஸ்இ உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள், வகுப்பாசிரியா்கள் முன்னிலையில் கருத்து கேட்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதுது.

இதில், பெரும்பாலானோா் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்றும், சிலா் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். முகக் கவசம், சமூக இடைவெளியை மாணவா்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கும் வகையில் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கலாம் என்றும் ஒரு சிலா் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனா்.

மேலும், இணையவழிக் கல்வியால் மாணவ, மாணவியா் தேவையற்ற பிரச்னைகளைச் சந்திப்பதாகவும், மனரீதியாக பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தந்தப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை வகுப்பு வாரியாக கருத்து கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு கூட்டம் தொடா்பான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, ஒவ்வொரு பள்ளியிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com