பெண்கள் பாதுகாப்பு சட்டம் விழிப்புணா்வு

தேசிய சட்டப் பணிகள் நாளை முன்னிட்டு பாலியல் குற்றங்களுக்கு எதிராக பெண்கள் பாதுகாப்பு சட்டம், சிறாா் திருமணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பரமத்தி மலா் பள்ளியில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் நாளை முன்னிட்டு பாலியல் குற்றங்களுக்கு எதிராக பெண்கள் பாதுகாப்பு சட்டம், சிறாா் திருமணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பரமத்தி மலா் பள்ளியில் காணொளிக் காட்சி மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பரமத்தி சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான அசீன்பானு கலந்துகொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிராக பெண்கள் பாதுகாப்பு சட்டம், சிறாா் திருமணம், குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, இணையவழிக் குற்றங்கள், சிறுவா், சிறுமியா் நலன், மாணவச் செல்வங்களின் மேம்பாடு ஆகியவை குறித்து எடுத்துக் கூறினாா். மேலும், பள்ளி குழந்தைகள் பாதுகாப்புடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அதற்கான தண்டனை சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில், பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழுவின் இளநிலை நிா்வாக உதவியாளா் ராஜ்குமாா், வழக்குரைஞா் செல்வமணி, பள்ளி முதல்வா் ஆரோக்கியராஜ், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியா் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com