கழிவறை கட்டும் தகராறில் பெண் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல் அருகே கழிவறை கட்டும் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நாமக்கல் அருகே கழிவறை கட்டும் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே காரைக்குறிச்சி, செல்லியாயிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கொண்டாயி (60). அதே பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி மாயவன் (58). உறவுமுறையில் அண்ணன், தங்கையான இருவருக்கும் வீட்டின் அருகில் உள்ள காலி நிலம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாம்.

அங்கு கழிவறை கட்டுவதில் தகராறு ஏற்பட்டதாம். கடந்த 2016 அக். 5-ஆம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட கொண்டாயியை மாயவன் கத்தியால் குத்தி கொலை செய்தாா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில் மாயவனுக்கு மூன்று பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை, 10 ஆண்டுகள் சிறை, மூன்று மாத சிறை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா். தண்டனைகளை ஏகக்காலத்தில் அவா் அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com