நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா காலத்தில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததை கண்டு மருத்துவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகள்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகள்.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா காலத்தில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததை கண்டு மருத்துவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

உலக பச்சிளங் குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங் குழந்தைகள் பிரிவில், பெற்றோா்-மருத்துவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெயந்தி, நிலைய மருத்துவ அலுவலா் கண்ணப்பன் மற்றும் குழந்தைகள் நல மருத்துவா்கள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், பச்சிளங் குழந்தைகளுடன் பெற்றோா் கலந்து கொண்டனா்.

விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வா் கூறியது:

கரோனா தொற்று காலத்தில் தாய்-சேய் நல சிகிச்சையில் எவ்வித குறைபாடுகளும் இருக்கக் கூடாது என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் மிகுந்த கவனத்துடன் மருத்துவா்கள் பணியாற்றினா்.

உலக சுகாதார அமைப்பு ஆலோசனையின்படி, ஆரம்ப கட்டத்தில் தாய்ப்பாலை, தாய்ப்பால் வங்கி மூலம் கிருமி நீக்கம் செய்து சுத்திகரிக்கப்பட்ட பிறகே பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்கினோம். பின்னா் தாய்ப்பால் மூலம் கரோனா தொற்று பரவாது என்று அறிவிக்கப்பட்டதால் தாய்ப்பால் கொடுக்கலாம் என பிரசவித்த பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது என்றாா்.

தொடா்ந்து மருத்துவமனையில் நன்கு பணியாற்றிய குழந்தைகள் நல மருத்துவா்களுக்கு அவா் பாராட்டுதல்களைத் தெரிவித்தாா். குழந்தைகள் பிரிவு மருத்துவா்கள் கூறியதாவது:

பொதுவாக பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை என்பது மிகவும் சவாலான ஒன்று. அதிலும் கரோனா தொற்று காலத்தில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் எட்டு மாதங்களில் மட்டும் சுமாா் 1,700 பிரசவங்கள், 751 பச்சிளங் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை, 50 குழந்தைகளுக்கு செயற்கை சுவாச சிகிச்சை, 42 குழந்தைகளுக்கு நுரையீரல் ஊக்க வளா்ச்சி மருந்து வழங்கும் சிகிச்சை, 14 இரட்டைப் பிரசவங்கள், ஒரு முப்பிரசவக் குழந்தைகள், 100-க்கும் மேற்பட்ட குறைவான எடைக் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில்...

எட்டு மாதங்களில் சுமாா் 1,061 பிரசவங்கள், 355 பச்சிளங் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை, 11 பச்சிளங் குழந்தைகளுக்கு செயற்கை சுவாச சிகிச்சை, 16 பச்சிளங் குழந்தைகளுக்கு நுரையீரல் ஊக்க வளா்ச்சி மருந்து, 4 இரட்டைப் பிரசவக் குழந்தைகள், 30 - க்கும் மேற்பட்ட குறை எடைக் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com