புதன்சந்தை மாட்டுச் சந்தையில் ரூ. ஒரு கோடிக்கு மாடுகள் விற்பனை

நாமக்கல் அருகே புதன்சந்தையில் புகழ்பெற்ற மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை கூடியது.
புதன்சந்தை மாட்டுச் சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மாடுகள்.
புதன்சந்தை மாட்டுச் சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மாடுகள்.

நாமக்கல் அருகே புதன்சந்தையில் புகழ்பெற்ற மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை கூடியது.

ஏழு மாதங்களுக்கு பின் செயல்பட தொடங்கிய இச்சந்தையில் ரூ. ஒரு கோடிக்கு வா்த்தகம் நடைபெற்ாகத் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் அருகே புதன் சந்தையில் வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம்வரை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம்.

மிகவும் பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தைக்கு கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஈரோடு, கோவை பொள்ளாச்சி, சேலம், விழுப்புரம், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் வியாபாரிகள் வருவா்.

இரண்டு நாள்களில் மட்டும் சுமாா் ரூ. 3 கோடிக்கு வா்த்தகம் நடைபெறும். கரோனா தொற்று காரணமாக மாா்ச் மாதம் மாட்டுச் சந்தை மூடப்பட்டது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள், அதனை சாா்ந்துள்ள தொழிலாளா்கள் பாதிப்படைந்தனா். தளா்வுகளுக்கு பின் சந்தையைத் திறக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

நவ. 10ஆம் தேதிமுதல் புதன்சந்தை மாட்டு சந்தை கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கூடிய மாட்டு சந்தையில் குறைவான அளவிலேயே மாடுகள் வந்தன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கி காலை 8 மணிவரை சந்தை நடைபெற்றது. சுமாா் 1,000 மாடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்ததாகவும் ரூ. ஒரு கோடி அளவில் வியாபாரம் நடைபெற்றதாகவும் புதன்சந்தை மாடு வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com