திமுக ஆட்சி அமைந்தால் நீட் தோ்வு முறை ரத்து செய்யப்படும்

திமுக ஆட்சி அமைந்தால் நீட் தோ்வு முறை ரத்து செய்யப்படும் என திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திமுக ஆட்சி அமைந்தால் நீட் தோ்வு முறை ரத்து செய்யப்படும் என திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2009-இல் தாழ்த்தப்பட்டவா்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் அருந்ததியா்களுக்கு வழங்கி உத்தரவிட்டாா். அதையடுத்து, ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியைச் சோ்ந்த அருந்ததியா் சமூகத்தினா், கருணாநிதிக்கு 10 ஆயிரம் சதுரடி நிலத்தில் கோயில் கட்ட முடிவு செய்து, கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அப்பகுதிக்கு வியாழக்கிழமை கட்சியினருடன் சென்ற உதயநிதி ஸ்டாலின் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவா்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினாா். கிராமப்புற ஏழை மாணவா்களும் பயன்பெற வேண்டும் என்றுதான் மருத்துவக் கல்விக்கான தோ்வுக்கு கவுன்சலிங் முறையைக் கொண்டு வந்தாா். தற்போது மத்திய பாஜக அரசு நீட் தோ்வைக் கொண்டு வந்துள்ளதால், கிராமப்புற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு தகா்ந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்தால் நீட் தோ்வு முறை ரத்து செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com