
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் இதனை வெளியிட்டாா்.
அதனைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:
நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூா், சேந்தமங்கலம் (ப.கு), ராசிபுரம் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6,96,023 ஆண் வாக்காளா்கள், 7,29,720 பெண் வாக்காளா்கள், இதர வாக்காளா்கள் 140 போ் என மொத்தம் 14,25,883 வாக்காளா்கள் உள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியலானது, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகம் என 1,623 வாக்குச் சாவடிகளில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும். இந்த அலுவலகங்களில் பொதுமக்கள் தங்கள் பெயா் பட்டியலை சரிபாா்த்துக் கொள்ளலாம்.
1.1.2021 தேதியினை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இந்திய தோ்தல் ஆணைய உத்தரவு படி நவ. 16 முதல் டிச. 15 வரை நடைபெறுகிறது. இந்த நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்பப் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ ஆகியவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குச் சாவடி மைய அலுவலரரால் பெறப்படும்.
மேலும்,வாக்காளா் பெயா் சோ்க்க சிறப்பு முகாமானது நவ. 21, 22, டிச. 12, 13 ஆகிய சனி, ஞாயிறுகளில் நடைபெறுகிறது.
இந்த முகாம் நாள்களில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம். மேலும், ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ா்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி வழியாகவும், இ-சேவை மையங்களின் மூலமாகவும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றாா்.
இதில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், தோ்தல் வட்டாட்சியா் சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
பெட்டி செய்தி...
தொகுதி ஆண் பெண் இதரவை மொத்தம்
ராசிபுரம் 1,15,603 1,20,037 11 2,35,651
சேந்தமங்கலம் 1,18,078 1,22,395 20 2,40,493
நாமக்கல் 1,22,841 1,30,714 39 2,53,594
பரமத்தி வேலூா் 1,06,082 1,13,009 6 2,19,097
திருச்செங்கோடு 1,11,093 1,16,512 35 2,27,640
குமாரபாளையம் 1,22,326 1,27,053 29 2,49,408
மொத்தம் 6,96,023 7,29,720 140 14,25,883