பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

வெங்காயப் பயிருக்கான காப்பீடு செய்து பயன்பெறுமாறு ராசிபுரம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் திவ்யா விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.

வெங்காயப் பயிருக்கான காப்பீடு செய்து பயன்பெறுமாறு ராசிபுரம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் திவ்யா விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுசெய்ய பிரதமா் பயிா்க் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிா் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது. கிராமப் பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

வெங்காயப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ஆயிரத்து 805 ரூபாய் 58 காசுகள் பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். இதை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். வங்கிக் கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கியிலேயே பிரீமியத் தொகையை பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

இதில் இணைய விரும்பும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com