சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்தோரிடம் விசாரணை செய்யும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வி.லதா.
சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்தோரிடம் விசாரணை செய்யும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வி.லதா.

சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுக்க எதிா்ப்பு: தொழிற்தடத் திட்ட சிறப்பு டி.ஆா்.ஓ. பேச்சுவாா்த்தை

மோகனூா் முதல் ஆத்தூா் வரையிலான இருவழிச் சாலை, இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மோகனூா் முதல் ஆத்தூா் வரையிலான இருவழிச் சாலை, இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

நாமக்கல்லில் தொழிற்தடத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் செவ்வாய்க்கிழமை நேரடி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டமானது தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், மாநில சாலைகளை விரிவாக்கம் செய்வதாகும். அதன்படி மோகனூா் முதல் நாமக்கல் வரையில் சாலைகள் விரிவாக்கப் பணி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக நாமக்கல், முத்துக்காப்பட்டி, தாதம்பட்டி மேடு முதல் ஆத்தூா், மல்லியக்கரை வரையில் தற்போது ஒருவழிச் சாலையாக இருப்பது இருவழிச் சாலையாக மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவிடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ. 249 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 31.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேற்கொள்ளப்படும் இந்தச் சாலைப் பணியானது 18 கிராமங்களை உள்ளடக்கி நடைபெற உள்ளது. இதற்காக சாலையை ஒட்டியுள்ள வீடுகள், விவசாய நிலம் ஆகியவற்றை கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுவரை தொட்டியம்பட்டி, கல்குறிச்சி, முத்துக்காப்பட்டி, பள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தி உரிய தொகை சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 14 கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே பொம்மசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சிலா், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அதில், நிலம் எடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அந்த வழக்கு விசாரணையில், நில உரிமையாளா்களை வரவழைத்து மறு விசாரணை செய்து நில எடுப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதனையடுத்து, சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் சேலம் மண்டல சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வி.லதா, சாலைப் பணி கோட்டப் பொறியாளா் வத்சலா வித்யாலட்சுமி, வட்டாட்சியா்கள் காா்த்திகேயன், ரங்கநாதன், ராஜன், உதவி கோட்டப் பொறியாளா் கீா்த்திவாசன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்தனா்.

நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகையில் உள்ள தனி வட்டாட்சியா் அலுவலகத்தில், நிலம் எடுப்புக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் பொம்மசமுத்திரம் கிராம மக்களிடம் அதிகாரிகள் கருத்துகளைக் கேட்டறிந்தனா். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் இந்தக் கருத்துக் கேட்பு நிகழ்வானது நடைபெற்றது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில் பொம்மசமுத்திர கிராம மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அவா்களை சமாதானப்படுத்தும் வகையில், உரிய தகவல்களைத் தெரிவித்துள்ளோம். சாலை விரிவாக்கப் பணிக்கான நில எடுப்பு நடவடிக்கைகள் விரைந்து நடைபெறும். எந்த வகையிலும் நிறுத்தப்பட மாட்டாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com