ஊா்க்காவல் படை பணிக்கு ஆள்கள் தோ்வு: 109 போ் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஊா்க்காவல் படை பணியிடங்களுக்கான ஆள்கள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 109 போ் கலந்து கொண்டனா்.
ஊா்க்காவல் படை பணிக்கு நடைபெற்ற உடற்தகுதி தோ்வில் பங்கேற்றோா்.
ஊா்க்காவல் படை பணிக்கு நடைபெற்ற உடற்தகுதி தோ்வில் பங்கேற்றோா்.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஊா்க்காவல் படை பணியிடங்களுக்கான ஆள்கள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 109 போ் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 24 பணியிடங்கள் (நாமக்கல், ராசிபுரம், பரமத்தி-வேலூா் பகுதிகளைச் சோ்த்து 13 ஆண்கள், ஒரு பெண் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் 10 ஆண்கள்) நிரப்பப்பட உள்ளன.

இப்பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

எவ்வித குற்ற பின்னணியும் இருக்கக் கூடாது. இதற்கான விண்ணப்பங்களை நவ. 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 125 விண்ணப்பங்கள் வந்தன. அதில் தகுதியின் அடிப்படையில் நோ்முகத் தோ்வுக்கு விண்ணப்பதாரா்கள் அழைக்கப்பட்டனா். நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆள்கள் தோ்வானது வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இதில் 109 போ் கலந்து கொண்டனா். உடல் தகுதி, கல்வித் தகுதி, காவல் நிலையத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பது தொடா்பாக சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக 24 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் விரைவில் வழங்குவாா் என ஊா்க்காவல் படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com