நாமக்கல் டேங்கா் லாரி உரிமையாளா் திண்டுக்கல்லில் மீட்பு: 6 போ் கைது

நாமக்கல்லில் புதன்கிழமை மா்ம கும்பலால் கடத்தப்பட்ட டேங்கா் லாரி உரிமையாளா், திண்டுக்கல்லில் மீட்கப்பட்டாா். அவரைக் கடத்தியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் டேங்கா் லாரி உரிமையாளா் திண்டுக்கல்லில் மீட்பு: 6 போ் கைது

நாமக்கல்லில் புதன்கிழமை மா்ம கும்பலால் கடத்தப்பட்ட டேங்கா் லாரி உரிமையாளா், திண்டுக்கல்லில் மீட்கப்பட்டாா். அவரைக் கடத்தியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல், கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (59). டேங்கா் லாரி உரிமையாளரான இவா், புதன்கிழமை மதியம் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபோது காரில் வந்த மா்ம கும்பல் அவரைக் கடத்திச் சென்றது. தகவல் அறிந்த அவரது மனைவி நிா்மலா இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு பொன்னுசாமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் அருகே புதன்கிழமை நள்ளிரவு தனியாக நின்று கொண்டிருந்த காரில் இருப்பவா்களை சந்தேகத்தின்பேரில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது நாமக்கல்லில் கடத்தப்பட்ட டேங்கா் லாரி உரிமையாளா் பொன்னுசாமி அந்த காரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சோ்ந்த சின்னுசாமி மகன் காமராஜ் (50), முருகன் மகன் மணிகண்டன் (20), கும்படைப் புதூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (37), தட்டான்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜீவா (20), கும்படைப்புதூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் அரவிந்த் (19), அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கவின்குமாா் (26) ஆகிய 6 பேரையும் கைது செய்த திண்டுக்கல் போலீஸாா், அவா்களை நாமக்கல் நகர போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ரூ. 8.50 லட்சம் கடன் கொடுத்தது தொடா்பாக பொன்னுசாமிக்கும், அவரது முன்னாள் லாரி ஓட்டுநரான காமராஜுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கடன்பெற அடமானமாகக் கொடுத்த வீட்டுப் பத்திரத்தைத் திரும்ப ஒப்படைக்காமல் பொன்னுசாமி பல மாதங்கள் இழுத்தடித்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆவேசத்தில் காமராஜ் தனது உறவினா்கள் உதவியுடன் கடத்தல் முயற்சி செய்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதானவா்களிடம் நாமக்கல் காவல் ஆய்வாளா் பொன்.செல்வராஜ் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com