சூரசம்ஹார விழா: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சூரசம்ஹார விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல் காந்தி நகா், கடைவீதியில் உள்ள கோயில்களில் சூரசம்ஹாரத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி.
நாமக்கல் காந்தி நகா், கடைவீதியில் உள்ள கோயில்களில் சூரசம்ஹாரத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி.

சூரசம்ஹார விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல்- திருச்சி சாலையில் பொன்விழா நகா் கற்பக விநாயகா் கோயிலில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு 108 சங்காபிஷேகம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து மதியம் 12.30 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது.

நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகா் கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நாமக்கல்-மோகனூா் சாலை காந்தி நகா் தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டியின் முக்கிய விழாவான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் கணபதி பூஜை, சக்தி, சுப்ரமணியா் யாகம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு தங்கக்கவசத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பிற்பகல் 6 மணிக்கு மேல் எளிய முறையில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

இதேபோல சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள் பாலித்தாா். சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வள்ளிபுரத்தில் உள்ள தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.

மாருதி நகரில் உள்ள ராஜகணபதி கோயிலில், கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வதானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருமணக் கோலத்தில் பக்தா்களுக்கு முருகப்பெருமான் அருள் பாலித்தாாா். அனைத்து கோயில்களிலும் சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கோயில்களில் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தபடியும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com