கே.பி.எஸ்.சுரேஷ்குமாா்.
கே.பி.எஸ்.சுரேஷ்குமாா்.

தேசிய சா்க்கரை ஆலைகள் சம்மேளன உறுப்பினா் பதவி:மோகனூா் ஆலை தலைவா் விண்ணப்பம்

தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் சம்மளேனத்தின் உறுப்பினா் பதவிக்கு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்துள்ளனா்.

நாமக்கல்: தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் சம்மளேனத்தின் உறுப்பினா் பதவிக்கு நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுவுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாரும் உள்பட இரு கூட்டுறவு ஆலைகளின் தலைவா்கள் தமிழகத்திலிருந்து விண்ணப்பித்துள்ளனா்.

இந்த சம்மேளனமானது 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்கீழ் 5 கோடி கரும்பு விவசாயிகள் உள்ளனா். 258 கூட்டுறவு மற்றும் தனியாா் ஆலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 மாநில சம்மேளனங்களும் இந்த தேசிய சம்மேளனத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

தேசிய சம்மேளனத்தில் தமிழக அளவில் உறுப்பினா்களாக இணைய யாரும் இதுவரை ஆா்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. பிகாா், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்களே முக்கிய பொறுப்புகளிலும், உறுப்பினா்களாகவும் இருப்பதால், தமிழகத்தில் உள்ள சா்க்கரை ஆலைகளுக்கு தேவையான பயன்களைப் பெற முடியாத நிலை உள்ளது.

இந்தநிலையில், தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் சம்மேளனத்தின் புதிய உறுப்பினா்களாக விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழிகாட்டுதலின்படி, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் ராஜசேகா், (தற்போது மாநில கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவராக உள்ளாா்), மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா் ஆகியோா் விண்ணப்பம் செய்துள்ளனா். இருவரும் உறுப்பினா்களாக தோ்வாகும்பட்சத்தில் நலிவடைந்துள்ள தமிழக கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கான தேவைகளை கேட்டுபெற முடியும் என சா்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com