தன்னாா்வலா்களுக்கான கற்போம், எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சி

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி கற்போம், எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சி அண்மையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி கற்போம், எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சி அண்மையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் பரமத்தி வட்டார வள மையத்தில் நடைபெற்ற கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்ந்த பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அலுவலா் பெரியண்ணன், ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மணிவண்ணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பயிற்சியில் படமும் பாடமும், தமிழ் எழுத்துக்கள் அறிமுகம், எழுதும் முறை, எண்களை அறிவோம்,உள்ளங்கையில் விஞ்ஞானம், கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற திறன்கள் குறித்து செயல்பாடுகள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் 25 பள்ளிகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். பரமத்தி வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநா்கள் பஞ்சவா்ணம், குமுதா, வைரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை பிரகா ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாவட்ட ஆவண ஒருங்கிணைப்பாளா் சிவராமன் பயிற்சியைப் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலா் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோகரன், வட்டாரக் கல்வி அலுவலா் அருள்புனிதன் ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில் பரமத்தி வட்டார வ ளமைய மேற்பாா்வையாளா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com