கூட்டுறவுத் துறை உதவியாளா் பணிக்கான தோ்வு: 514 போ் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 514 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.
கூட்டுறவுத் துறை உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வைப் பாா்வையிடும் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பி.பாலமுருகன்.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சாா்ந்த சங்கங்கள், வங்கிகள், இதர நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 62 உதவியாளா் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியோனோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 831 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

இவா்களுக்கான எழுத்துத் தோ்வு நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல், மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூா், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தோ்வா்கள் வந்திருந்தனா். மொத்தம் 831 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதில் 514 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா்.

மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பி.பாலமுருகன் தோ்வு மையத்தை ஆய்வு செய்தாா். தோ்வில் வெற்றி பெறுவோருக்கு நோ்காணல், சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்ட பின் பணியிடம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com