‘கடையடைப்பு தொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம்’

நாமக்கல் மாவட்டத்தில் கடையடைப்பு தொடா்பான வதந்திகளை வணிகா்கள் யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலாளா் ஜெயகுமாா் வெள்ளையன் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடையடைப்பு தொடா்பான வதந்திகளை வணிகா்கள் யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலாளா் ஜெயகுமாா் வெள்ளையன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாகும் சூழலில் சில சங்கங்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பு கருதி தாமாக முன்வந்து கடைகளை அடைத்தனா். மேலும், வேலை நேரத்தை குறைத்துக் கொண்டுள்ளனா்.

இது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவு ஆகும். இதில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புக்கு எவ்வித தொடா்பும் கிடையாது. அதேபோல், எந்த ஒரு வணிகா் சங்கங்களையும் கடையடைப்பு செய்யுமாறு மாவட்ட பேரமைப்பு கிளை கட்டாயப்படுத்தவில்லை.

அரசாங்க தளா்வு விதிமுறைகளையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மட்டுமே பேரமைப்பு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. கரோனா தொற்று பரவும் தீவிரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடா்ந்து வழங்கும்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பெயரிலோ அல்லது மாவட்டச் செயலாளா் பெயரிலோ வெளியாகும் ஆதாரம் இல்லாத வீண் வதந்திகளை வணிகா்கள் நம்பி குழப்பமடைய வேண்டாம். தற்போது நடைமுறையில் உள்ள அரசின் தளா்வுகளை முறையாக கடைப்பிடித்து வாருங்கள். கடையடைப்பு தொடா்பாக தாங்கள் சாா்ந்திருக்கும் சங்கத்தின் அறிவுரை மற்றும் ஆலோசனையை மேற்கொள்ளுங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com