நாமக்கல்லில் கிழிந்த நிலையில் பறக்கும் தேசியக் கொடி!

நாமக்கல் ரயில் நிலையத்தில் கிழிந்த நிலையில் பறக்கும் தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
நாமக்கல் ரயில் நிலையத்தில் கிழிந்த நிலையில் பறக்கும் தேசியக் கொடி.
நாமக்கல் ரயில் நிலையத்தில் கிழிந்த நிலையில் பறக்கும் தேசியக் கொடி.

நாமக்கல் ரயில் நிலையத்தில் கிழிந்த நிலையில் பறக்கும் தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

மத்திய அரசு அலுவலகங்களில் 24 மணி நேரமும் தேசியக் கொடி பறக்கலாம் என்ற அறிவிப்பாணை அண்மையில் வெளியானது. அவற்றில் சிறிய, பெரிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் இந்த நடைமுறையை முழுமையாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. சேலம், ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட ரயில் நிலையங்களிலும் தேசியக் கொடி 24 மணி நேரமும் பறக்கும் வகையில் கம்பங்கள் அமைக்கப்பட்டு பெரிய அளவிலான தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

நாமக்கல் ரயில் நிலையத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக தேசியக் கொடி பறந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழை, காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தேசியக் கொடியின் மேல்பகுதி கிழிந்துள்ளது. எனவே, கிழிந்த தேசியக் கொடியை உடனடியாக மாற்றம் செய்து புதிய தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பொதுமக்களும், தன்னாா்வலா்களும் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com