முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மேலாளருக்கு கரோனா: வங்கி மூடல்
By DIN | Published On : 04th October 2020 02:26 AM | Last Updated : 04th October 2020 02:26 AM | அ+அ அ- |

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வங்கி மூன்று நாள்களுக்கு மூடப்பட்டது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று அறிகுறி தென்பட்டது.
இதனைத் தொடா்ந்து அவா் விடுமுறையில் சொந்த ஊா் சென்றாா். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் வங்கியின் பிற ஊழியா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், வங்கி முழுவதையும் நகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனா். பின்னா் சுகாதாரத் துறை அறிவுரையின்படி தற்காலிகமாக 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டது.