முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை:நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தங்கக் கவச அலங்காரம்
By DIN | Published On : 04th October 2020 02:25 AM | Last Updated : 04th October 2020 02:25 AM | அ+அ அ- |

தங்கக் கவச அலங்காரத்தில் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி.
நாமக்கல்: புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சிறப்பு தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆஞ்சநேய சுவாமியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கரோனா தொற்றுப் பரவலால் ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்த கோயில், செப். 1-ஆம் தேதி திறக்கப்பட்டது.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் ஆஞ்சநேயரைத் தரிசிக்கவும் வந்து செல்கின்றனா். மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சுவாமியை தரிசிக்க திரளான பக்தா்கள் வந்தனா். அதிகாலையில் சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், திரவியம் மற்றும் நறுமணப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் தங்கக் கவச அலங்காரம் சாத்துப்படி நடைபெற்றது.
சமூக இடைவெளியில் பக்தா்கள் நிறுத்தப்பட்டு கோயிலுக்குள் அனுப்பப்பட்டனா். அனைவருக்கும் கற்கண்டு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.