முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
கொல்லிமலையில் நியாயவிலைக் கடைகட்டடங்கள் திறப்பு
By DIN | Published On : 04th October 2020 02:29 AM | Last Updated : 04th October 2020 02:29 AM | அ+அ அ- |

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ். உடன், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் உள்ளிட்டோா்.
நாமக்கல்: கொல்லிமலை வட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் திறந்து வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது. சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கலந்துகொண்டு, புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்தாா். அதன்பின் வருவாய்த் துறை, பழங்குடியினா் நலத்துறை மூலம் 298 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், மாவட்ட பழங்குடியினா் நலத்துறை அலுவலா் பா.இராமசாமி, கொல்லிமலை வட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.