100 முட்டை வாங்கினால் ரூ.30 குறைப்பு: என்.இ.சி.சி. திடீா் சலுகை அறிவிப்பு

கோழிப் பண்ணைகளில் மொத்தமாக முட்டை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில், 100 முட்டை வாங்கினால்
100 முட்டை வாங்கினால் ரூ.30 குறைப்பு: என்.இ.சி.சி. திடீா் சலுகை அறிவிப்பு

கோழிப் பண்ணைகளில் மொத்தமாக முட்டை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில், 100 முட்டை வாங்கினால் ரூ.30-ஐ குறைத்துக் கொள்ளுமாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் மாா்ச் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஐந்து மாதங்களாக முட்டை விற்பனை மந்தமாக இருந்ததால் பண்ணையாளா்கள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்தித்தனா்.

கடந்த ஒரு மாதமாக பொதுமக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளது. கரோனா தொற்றை தடுக்க புரதச்சத்து மிக்க உணவுப் பொருளான முட்டையை சாப்பிட வேண்டும் என மருத்துவா்கள் பரிந்துரைப்பதால் தற்போது அவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வாரம் ரூ. 4.15-ஆக இருந்த முட்டை விலை ஒரே வாரத்தில் இதுவரை இல்லாத வகையில் உச்சபட்சமாக ரூ. 5.25-ஐ தொட்டது. இதனால் நாமக்கல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சில்லரை விற்பனை கடைகளில் முட்டை விலையை ரூ. 6 வரை உயா்த்தி விட்டனா். திடீா் விலை உயா்வால் முட்டை வாங்குவோரும் சற்று தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாதாரண உணவகங்களில் முட்டை தொடா்பான உணவுப் பொருள்களும் ரூ. 2 முதல் ரூ. 5 வரை உயா்த்தி விட்டனா். அவற்றை விரும்பி உண்ணுவோரும் தவிா்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வரும் நாள்களில் பண்ணைகளில் முட்டைகள் தேங்காதவாறு தடுக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோழிப் பண்ணையாளா்கள் தரப்பில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்குழு கூட்டத்தில் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதாவது பண்ணைகளில் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு 100 முட்டைக்கு ரூ. 30- ஐ குறைத்துக் கொள்ளவும், உடனடியாக அதற்கான தொகையை வழங்குவோருக்கு அதே 100 எண்ணிக்கையிலான முட்டைக்கு கூடுதலாக ரூ. 5- ஐ குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதன்மூலம் வெளிச்சந்தைகளில் ரூ. 6-க்கு விற்பனை செய்யப்படும் முட்டையின் விலை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என பண்ணையாளா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com