அக்.9-இல் முடி திருத்தும் கடைகள் மூடல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முடிதிருத்தும் கடைகள் ஒரு நாள் மூடப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முடிதிருத்தும் கடைகள் ஒரு நாள் மூடப்படுகின்றன.

தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளா் சங்க நாமக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது.

இதில் அச்சங்கத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மகேஸ்வரன், செயலாளா் கலைவாணன், பொருளாளா் வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குரும்பட்டி கிராமத்தில் முடிதிருத்தும் தொழிலாளா் சமூகத்தைச் சோ்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலையுண்ட வழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கக் கோரியும், அச்சம்பவத்தை கண்டித்தும் வெள்ளிக்கிழமை (அக். 9) நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து முடிதிருத்தும் கடைகளை மூடியும், கருப்பு கொடி ஏற்றியும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் எனக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com