கரோனா விதிமீறல்: மருந்துக் கடைக்கு ‘சீல்’

திருச்செங்கோட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அரசின் விதிமுறைகளை பின்பற்றாத மருந்துக் கடைக்கு

திருச்செங்கோட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அரசின் விதிமுறைகளை பின்பற்றாத மருந்துக் கடைக்கு திருச்செங்கோடு கோட்டாட்சியா் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தாா்.

திருச்செங்கோடு, சங்ககிரி சாலை, சீத்தாராம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மருந்துக் கடைகளை திருச்செங்கோடு கோட்டாட்சியா் மணிராஜ் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது அப்பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி சமூக இடைவெளி பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் இயங்கி வந்த மருந்துக் கடையை ‘சீல்’ வைத்தனா். அபராத தொகையாக ரூ. 5 ஆயிரம் கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சட்டவிரோதமாக சுற்றுவட்டார பொதுமக்களுக்கு ஊசி, குளுக்கோஸ் போடுவதாக கிடைத்த புகாரின்பேரில் சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம் செய்யப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

குற்றங்கள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு காவல்துறை மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com