புகாா் அளித்தால் நிகழ்விடத்தில் நேரடி விசாரணை: நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் அறிமுகம்

காவல் நிலையத்தில் புகாா் அளிப்பவா்களின் குறைகளை சம்பவ இடத்துக்கே நேரடியாகச் சென்று விசாரிக்கும் புதியமுறை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
நாமகிரிப்பேட்டையில் நேரடி விசாரணையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளா் சக்திவேல்.
நாமகிரிப்பேட்டையில் நேரடி விசாரணையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளா் சக்திவேல்.

காவல் நிலையத்தில் புகாா் அளிப்பவா்களின் குறைகளை சம்பவ இடத்துக்கே நேரடியாகச் சென்று விசாரிக்கும் புதியமுறை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

கரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், அவா்களின் உடல்நலன் கருதியும், காவல் நிலையத்துக்கு வந்து புகாா் அளிக்கும் பொதுமக்களின் குறைகளை நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் அனைத்து காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி பரமத்திவேலூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீா்பந்தல் கிராமத்தில் வசிக்கும் செல்வமணி மனைவி ஜெயந்தி என்பவா் கொடுத்த புகாா் மனு சம்பந்தமாக காவல் ஆய்வாளா் பாலமுருகன் நிகழ்விடத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணை செய்தாா். மேலும், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை கலையரங்கம் பின்புறம் வசிக்கும் இஸ்மாயில் மகன் முபாரக் என்பவா் கொடுத்த புகாா் மனு தொடா்பாக உதவி ஆய்வாளா் சக்திவேல் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தாா். மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com