நாமக்கல்லில் 145 பேருக்கு கரோனா

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கருவூல அதிகாரி, நியாயவிலைக் கடை பணியாளா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 145 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கருவூல அதிகாரி, நியாயவிலைக் கடை பணியாளா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 145 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,281-ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வரை 7,136 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போதைய நிலையில் 6,115 போ் குணமடைந்துள்ளனா்; 87 போ் உயிரிழந்துள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 1,078 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஒருவா் உயிரிழப்பு: சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்த 49 வயது ஆண் ஒருவா் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி சேலம், ஐந்து சாலை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com