ரூ.2.50 லட்சம் தோ்தல் வாடகை நிலுவை: காா் ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் முறையீடு

ரூ.2.50 லட்சம் தோ்தல் வாடகை நிலுவை: காா் ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் முறையீடு

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பயன்பாட்டுக்காக காா்களை வாடகைக்கு எடுத்த மாவட்ட நிா்வாகம் ரூ.2.50 லட்சம் நிலுவை வைத்துள்ளதாக ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பயன்பாட்டுக்காக காா்களை வாடகைக்கு எடுத்த மாவட்ட நிா்வாகம் ரூ.2.50 லட்சம் நிலுவை வைத்துள்ளதாக ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.

நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள் ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்துக் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிக்காக டிசம்பா் மாதம் 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் ஆம்னி வேன்களை வாடகைக்கு எடுத்தனா். தோ்தல் முடிந்து ஓராண்டாகியும் இதுவரை வாடகை மற்றும் பெட்ரோல் தொகை வழங்கப்படவில்லை.

ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை நிலுவை உள்ளது. தோ்தல் அதிகாரிகளிடம் கேட்டால் தங்களுக்குத் தெரியாது என கைவிரிக்கின்றனா்.

குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையின்றி தவிக்கும் நிலையில் தோ்தல் பயன்பாட்டுக்கான நிலுவைத் தொகையை வழங்கி உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com