கரோனா தொற்று பரிசோதனை சிறப்பு முகாம்

நாமக்கல் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரிசோதனை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று பரிசோதனை முகாம்.
நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று பரிசோதனை முகாம்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரிசோதனை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 150 போ் வரை பாதிப்புக்குள்ளாகி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆங்காங்கே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வாா்டுகளிலும் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் வீடு, வீடாகச் சென்று கபசுரக் குடிநீா், கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடா் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை சந்தைப்பேட்டைபுதுாா், தில்லைபுரம் உள்ளிட்ட பகுதியில் கரோனா தொற்றைக் கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமை நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார அலுவலா் சுகவனம் ஆகியோா் தொடக்கி வைத்தனா். நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com