குழந்தைகள் இல்லங்களை நடத்தக் கட்டுப்பாடு விதிப்பு

அரசு பதிவு பெறாமல் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் இல்லங்களை நடத்தினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

அரசு பதிவு பெறாமல் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் இல்லங்களை நடத்தினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகளை வைத்து பராமரிக்கும் அனைத்து இல்லங்களும் பதிவு செய்யப்பட்ட பின்னரே செயல்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் இல்லங்களை நடத்தினால் ஓராண்டு சிறை தண்டணையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04286-233103 எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். சைல்டு லைன் அமைப்பை இலவச தொலைபேசி எண்ணான 1098-இல் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com