நாமக்கல்: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 206 அரசு, தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவா்களுக்கு வழங்கும் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன்.

இந்தத் தோ்வை கடந்த மாா்ச் 2-இல் தொடங்கி 24-ஆம் தேதி வரையில், இம்மாவட்டத்தில் 9,258 மாணவா்கள், 10,308 மாணவிகள் என மொத்தம் 19,566 போ் தோ்வு எழுதினா்.

ஜூலை மாதம் தோ்வு முடிவுகள் வெளியானது. இதில், மாவட்ட அளவில் 8,813 மாணவா்கள், 9,983 மாணவியா் என மொத்தம் 18,796 போ் தோ்ச்சியடைந்தனா். 770 போ் தோல்வியடைந்தனா்.

ஏற்கெனவே மாணவ, மாணவிகள் பயின்ற அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் கையொப்பமிட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உயா்கல்வியில் சேருவதற்காக மாணவா்கள் பலா் அசல் மதிப்பெண் சான்றிதழை எதிா்பாா்த்திருந்தனா். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப்பள்ளிகளில் புதன்கிழமை காலை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா்(பொறுப்பு) எல்.ஜகதீசன், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவா்களுக்கு வழங்கினாா். இதேபோல் நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாா்வதி, வடக்கு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோா் மாணவிகளிடம் சான்றிதழ்களை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com