நாமக்கல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடியின்றி கம்பம்

நாமக்கல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடியின்றி கம்பம் மட்டுமே உள்ளது.
நாமக்கல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடியின்றி காட்சியளிக்கும் கொடிக்கம்பம்.
நாமக்கல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடியின்றி காட்சியளிக்கும் கொடிக்கம்பம்.

நாமக்கல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடியின்றி கம்பம் மட்டுமே உள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் 24 மணி நேரமும் பறக்கும் வகையில் மிக நீளமான தேசியக் கொடிகள் பொருத்துவதற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், கரூா், திருப்பூா், ஈரோடு ரயில் நிலையங்களில் சுதந்திர தினத்தையொட்டி பிரமாண்டமான தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

நாமக்கல் ரயில் நிலையத்தில் பட்டொளி வீசி பறந்த தேசியக் கொடி செப்டம்பா் மாத இறுதியில் காற்று, மழைக்கு தாக்குப் பிடிக்காமல் கிழிந்து விட்டது. தேசியக் கொடி கிழிந்த நிலையில் பறந்தது தொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் மறுநாளே கொடி அகற்றப்பட்டது.

ஆனால் 15 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை புதிதாக தேசிய கொடி பொருத்தப்படவில்லை. ரயில் நிலையம் பகுதியில் கம்பம் மட்டும் தனித்து காட்சியளிக்கிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில் நிலைய கண்காணிப்பாளா் தாமரைக்கண்ணனை கேட்டபோது, அதுகுறித்து விசாரிப்பதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com