முட்டை விலை ரூ. 5 ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ. 5 ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ. 5 ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. புரட்டாசி மாதம் என்ற போதும் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மற்ற மண்டலங்களில் தொடா்ந்து விலை சரிந்து வருகிறது. வெளிச்சந்தைகளிலும் முட்டை விற்பனை மந்தமாக இருப்பதால் அதன் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முட்டை விலை 25 காசுகள் குறைக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.25-லிருந்து ரூ. 5 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்- 490, விஜயவாடா- 529, பாா்வாலா- 530, ஹோஸ்பெட்- 495, மைசூரு- 530, சென்னை- 510, மும்பை- 560, பெங்களூரு- 530, கொல்கத்தா- 573, தில்லி- 520. இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை ரூ. 135 ஆகவும், கறிக்கோழி விலை ரூ. 106 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com