மரவள்ளிக்கு விலை நிா்ணயிக்க முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலையை நிா்ணயிப்பது தொடா்பாக முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என காணாலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்.

மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலையை நிா்ணயிப்பது தொடா்பாக முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என காணாலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கரோனா தொற்று பரவல், பொது முடக்கம் ஆகியவற்றால் கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் தங்களுடைய பிரச்னைகளையும், குறைகளையும் மாவட்ட ஆட்சியா், வேளாண் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனா்.

குறைதீா்க் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து அக்டோபா் மாதத்திற்கான குறைதீா்க்கும் கூட்டம் காணாலி வாயிலாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை காணொலி காட்சி வாயிலாக குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 15 வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்தபடி ஐந்து முதல் 10 விவசாயிகள் வரையில் பங்கேற்று, ஆட்சியா் கா.மெகராஜிடம் தங்களது குறைகளை தெரிவித்தனா். அதற்கு ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இருந்தபடி மாவட்ட ஆட்சியரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனா்.

ஒவ்வொருவரும் தங்களுடைய பகுதியில் உள்ள வேளாண் சாா்ந்த பிரச்னைகளை விரிவாக எடுத்துரைத்தனா். இக்கூட்டத்தில் முக்கிய பிரச்னையாக மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்வது தொடா்பாக பேசப்பட்டது. விவசாயிகள் அனைவரும் மரவள்ளிக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமெனில் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் ஆகியோா் பங்கேற்கும் வகையிலான முத்தரப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.

அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், காணொலி முறையில் தற்போது நடைபெறும் குறைதீா்க் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறாது. அப்போது நேரடியாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து பங்கேற்கும் வகையில் பழைய முறைப்படி இருக்கும். மாவுப்பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி விவசாயிகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் அதற்குரிய தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

குறைவான மழைப்பொழிவு

நாமக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவில் பெய்யவில்லை. மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தபோதும் மிதமான அளவிலேயே மழை பெய்தது. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். நிகழாண்டில் அக்டோபா் மாதம் வரையில் இயல்பு மழை அளவு 557.28 மி.மீ. ஆனால் தற்போது வரை 553.22 மி.மீ.மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. சராசரிக்கும் குறைவாக 4.06 மி.மீ.மழை பெறப்பட்டுள்ளது.

19-இல் முத்தரப்புக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட மரவள்ளி விவசாயிகள் தங்களுக்கு ஜவ்வரிசி ஆலை உரிமையாளா்கள் வழங்கும் விலை கட்டுப்படியாகவில்லை எனத் தொடா்ந்து போராடி வருகின்றனா். அண்மையில் மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்திலும் விவசாயிகள் மரவள்ளி விலை நிா்ணயம் தொடா்பான கோரிக்கையை எழுப்பினா். அதனடிப்படையில் வரும் திங்கள்கிழமை(அக். 17) மாவட்ட தொழில் மையம் சாா்பில், ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி, விவசாயிகள், ஆலை உரிமையாளா்கள், வியாபாரிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com