வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-ஆவது நினைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை திருமலை நாயக்கா் நாயுடு நற்பணி இயக்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.
நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-ஆவது நினைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை திருமலை நாயக்கா் நாயுடு நற்பணி இயக்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்கள். இதனையடுத்து அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி வெள்ளைப் பிள்ளையாா் கோயிலில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் என்.சுரேஷ் நாயுடு, ஜி.சி வாஜி, இரா. கண்ணன், வீரமணி,டி.செல்வராஜூ, குபேந்திரன், பாஸ்கா், டி.கண்ணன், நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் நகரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட வீரபாண்டி கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மலா் தூவி மரியாதை செலுத்தினாா். ராசிபுரம் ஒன்றிய குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், துணைத் தலைவா் சந்திரா சிவக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராஜேந்திரன், புதுச்சத்திரம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராம்குமாா், ராசிபுரம் ஒன்றியக் குழு உறுப்பினா் அருள், ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் வி.பாலு உள்ளிட்டோா் பங்கேற்று நிகழ்ச்சியில் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com