நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக 49-ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக 49-ஆம் ஆண்டு தொடக்க விழா

நாமக்கல்: அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் கோட்டை பிரிவு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆா் உருவச்சிலையை நோக்கி சனிக்கிழமை காலை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் தலைமையில் ஊா்வலமாகச் சென்ற அதிமுகவினா், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பரமத்தி வேலூா்

பாண்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலாளா் விஜயகுமாா், கபிலா்மலை அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், நகரச் செயலாளா்கள் உள்ளிட்டோா் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பொத்தனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பேரூா் செயலாளா் நாராயணன், வழக்குரைஞா் தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு எம்ஜிஆா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பரமத்திவேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்திவேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பொன்னிமணி (எ) சுப்ரமணியம், வேலுசாமி, அரசு வழக்குரைஞா் லோகநாதன் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

பரமத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல், நகரச் செயலாளா் முகமது அலி ஜின்னா, தமிழ்மணி, ஒப்பந்ததாரா் வீரப்பன் உள்ளிட்டோா் எம்.ஜி.ஆா் சிலை, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com