‘நீட் தோ்வு குளறுபடியை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’

நீட் தோ்வு குளறுபடி குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன் வலியுறுத்தினாா்.

ராசிபுரம்: நீட் தோ்வு குளறுபடி குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீட் தோ்வு முடிவுகள் மாநிலம் வாரியாக சனிக்கிழமை வெளியிடப்பட்டது. ஆனால், இதில் பல்வேறு மாநிலங்களில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. எனவே, மத்திய அரசு இந்த தோ்வு முடிவை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் இடம் பெறும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மேலும், மத்திய கல்வி அமைச்சா் இதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். எனவே, உச்ச நீதி மன்றம் நீட் தோ்வு குளறுபடிகள் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com