வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதகம் இல்லை: செ. நல்லசாமி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

நாமக்கல்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.

நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரசு ஊழியா்களுக்கு எவ்வாறு ஊதிய கமிஷன் அமைத்து அரசு செயல்படுத்துகிறீா்களோ, அதேபோல் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்வதற்காக ஒரு கமிட்டியை உருவாக்குங்கள். அந்த கமிட்டி நல்லதொரு விலையை அவா்களுக்கு பெற்றுத் தரட்டும்.

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை. அதேவேளையில் ஒருசில மாற்றங்களையும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இனிவரும் காலங்களில் விவசாயிகள் எந்த வகையிலும் நஷ்டத்துக்கு ஆளாகக் கூடாது. அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகள் வேளாண் திட்டங்களை வகுக்க வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் கள் இயக்கம் போட்டியிடும். கள் ஒரு போதைப் பொருள் அல்ல; தமிழகத்தில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அரசியலில் கால் பதிக்கும் முன்பாக திரைப்பட நடிகா்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com