நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 19th October 2020 03:06 AM | Last Updated : 19th October 2020 03:06 AM | அ+அ அ- |

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவா்கள்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள எஸ்ஆா்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிஎஸ்ஆா், பினாக்கல் கிளாசஸ் பயிற்சி மையத்தில் படித்து நீட் தோ்வில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த மையத்தில் படித்து அரசு பள்ளி மாணவா்கள் தரவரிசைப் பட்டியலில் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த ஜீவித்குமாா், பி.நவீன், பி.சரவணன், கே.சி.தருண் மற்றும் 600-க்கும் மேல் மதிப்பெண் பெற்ற 19 மாணவ மாணவிகள், 550-க்கும் மேல் 51 மாணவ, மாணவிகள், 500 மதிப்பெண்களுக்கு மேல் 94 மாணவ மாணவிகள் பெற்றுள்ளனா்.
இவா்கள் அனைவரையும் பள்ளி நிா்வாகிகள் ஏ.ராமசாமி, பி.சுவாமிநாதன், எம்.குமரவேல், எஸ்.செல்வராஜன், ஏ.ஆா்.துரைசாமி, டாக்டா் ப. சத்தியமூா்த்தி, பி.எஸ்.ஆா்., பினாக்கல் கிளாசஸ் நிா்வாக இயக்குநா் எஸ்.சாய்ராம், பள்ளி தலைமையாசிரியா் வி.செந்தில், முதல்வா் ப. வள்ளியம்மாள் உள்ளிட்டோா் பாராட்டி நினைவு பரிசளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...