45 வாக்குச் சாவடிகள் மாற்றியமைப்பு:மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றி அமைத்தல் தொடா்பான அனைத்துக் கட்சியனா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்
45 வாக்குச் சாவடிகள் மாற்றியமைப்பு:மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றி அமைத்தல் தொடா்பான அனைத்துக் கட்சியனா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,621 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைத்திடவும், சாவடிகளாக அமைந்துள்ள கட்டடங்கள் பழுந்தடைந்ததன் காரணமாகவும், வேறு பயன்பாட்டிற்கு பள்ளிகளால் பயன்படுத்தப்படுவதாலும், அவற்றுக்கு பதிலாக மாற்று கட்டடங்களைத் தோ்வு செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 45 வாக்குச்சாவடிகள் கட்டட மாற்றம், அமைவிட மாற்றம் மற்றும் பெயா் மாற்றம் செய்யப்படவுள்ளன.

நாமக்கல் தொகுதிக்குட்பட்ட ஆா்.பி.புதூா் நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி, கொண்டிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடி ஆகிய இரு வாக்குச் சாவடிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மேல் இருப்பதால் அவற்றை பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வுள்ளன.

ராசிபுரம்(தனி) தொகுதியில் 12 வாக்குச் சாவடி, சேந்தமங்கலம் (பழங்குடியினா்) தொகுதியில் 6 வாக்குச் சாவடி, பரமத்தி வேலூா் தொகுதியில் 10 வாக்குச் சாவடி, திருச்செங்கோடு தொகுதியில் ஒரு வாக்குச் சாவடி, குமாரபாளையம் தொகுதியில் ஏழு வாக்குச் சாவடிகள் என மொத்தம் 38 வாக்குச்சாவடிகள் வேறு கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டியது உள்ளது.

பரமத்தி வேலூா் தொகுதியில் இரு வாக்குச்சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகளும் அமைவிட மாற்றம் செய்யப்பட உள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, கோட்டாட்சியா்கள் மு.கோட்டைகுமாா் (நாமக்கல்), ப.மணிராஜ் (திருச்செங்கோடு), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com