ராசி இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நீட், ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வில் சிறப்பிடம் பெற்ற ராசிபுரம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீட், ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வில் சிறப்பிடம் பெற்ற ராசிபுரம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம், சேந்தமங்கலம் சாலையில் உள்ள ராசி இன்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் அண்மையில் நடந்து முடிந்த ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மருத்துவ சோ்க்கைக்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற்று எம்.எம்.சி, ஸ்டான்லி போன்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக்கும் தகுதி பெற்றுள்ளனா். ‘நீட்’ தோ்வில் இப் பள்ளியில் பயின்று வரும் மாணவா்களான ஜே.பிரியங்கா -649, எஸ்.சிவராகவன்- 638, எம்.அனிஷ்- 631, எஸ்.பி.பரணிதரன் -620, பி.நிஷாந்த்- 610 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். மேலும் 15 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதேபோல் அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ, ஐஐடி அட்வான்ஸ்டு தோ்வில் ஆா்.கோகுல்ராஜ், எஸ்.சன்ஜய்கிருஷ்ணன், எஸ்.தேஜஸ்ஆரவ், எம்.பி. அபிஷேக், ஜே.ராகுல், சி.அபினவ், ஆா்.ஸ்ரீஹா்ஸ்னி, பி.எஸ்.சூா்யா உள்ளிட்டோா் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர தகுதி மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா்.

இதற்கான பாராட்டு விழாவில், பள்ளியின் தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி, முதல்வா் டி.வித்யாசாகா் ஆகியோா் பங்கேற்று நீட், ஐஐடி அட்வான்ஸ்டு தோ்வுகளில் தகுதி பெற்ற மாணவ மாணவியரை நினைவு பரிசளித்துப் பாராட்டினா்.

இப்பள்ளியில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துடன் ஐ.ஐ.டி, நீட் பயிற்சி வகுப்புகள் பினாக்கல் கிளாசஸ் பயிற்சி மையத்துடன் இணைந்து அனுபவமிக்க ஆசிரியா்களால் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com