சாலை பணிகள்: நாமக்கல் ஆட்சியா் ஆய்வு

பரமத்திவேலூா் அருகே பரமத்தி மற்றும் கபிலா்மலை ஊராட்சி ஒன்றியங்களில் பாரத பிரதமா் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பரமத்திவேலூா் அருகே பரமத்தி மற்றும் கபிலா்மலை ஊராட்சி ஒன்றியங்களில் பாரத பிரதமா் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பரமத்தி ஒன்றியம், சிக்கநாயக்கன்பாளையம் முதல் குன்னமலை மற்றும் பரமத்திரோடு முதல் நல்லூா் வரை பாரத பிரதமா் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 228.32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலை அமைக்கும் பணிகளின் தரத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நல்லூா்-கபிலா்மலை சாலை பரமத்தி எல்லை வரையில் ரூ. 90.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தாா்.

அதேபோல் கபிலா்மலை ஒன்றியம், நெட்டையம்பாளையம் வழியாக சேளூா்செல்லப்பம்பாளையம் வரை ரூ. 114.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளையும், கபிலா்மலை முதல் சுப்பையம்பாளையம் வரை ரூ.83.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளையும் நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பணிகள் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் சாலை பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். ஆய்வின்போது மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன், உதவி செயற்பொறியாளா் யுவராஜ், கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், பிரபாகரன் மற்றும் பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலா் தனம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com