வேளாண் சங்கத்தில் ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 21st October 2020 08:36 AM | Last Updated : 21st October 2020 08:36 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமையன்று 1,200 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 4,620 முதல் ரூ. 5,299 வரையில் விலைபோனது. மொத்தம் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்ட வியாபாரிகள் பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.