நாமக்கல்: 74 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 23rd October 2020 08:30 AM | Last Updated : 23rd October 2020 08:30 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 8,422 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது; 7,539 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 792 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91-ஆக உள்ளது.